×

நயினார்கோவில் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் ஆலோசனை கூட்டம்

 

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலைராஜன் தலைமையில், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வரும் ஜூன் 15ம் தேதி வரை அனைத்து கிராமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர பொதுமக்கள் கூடும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சுத்தம், சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்தில் வட்டார மருத்துவர், கல்வி அலுவலர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் வாழ்வாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நயினார்கோவில் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nammanuru ,Nayanargo ,Paramakudi ,Namma Nuru ,Nayanarko ,Namuruku Super ,Piravasi ,
× RELATED பரமக்குடி தாலுகா அலுவலகத்தில்...