×

பல்லடம்-தாராபுரம் சாலையில் ஆய்வு

 

பல்லடம்: பல்லடம் – தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் – தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது இருவழி சாலையாக இருப்பதை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரையிலான 11.80 கிலோ மீட்டர் சாலை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிக்கப்பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டு தரத்துடன் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, திருப்பூர் கோட்டப் பொறியாளர் ரமேஷ்கண்ணா, திருப்பூர் தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் உதவி கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post பல்லடம்-தாராபுரம் சாலையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Palladam-Tharapuram ,Palladam ,Highways Department ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...