×

பகார் ஸமான் 180 ரன் விளாசல் 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி

ராவல்பிண்டி: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச… நியூசிலாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. டேரில் மிட்செல் 129 ரன் (119 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். சாத் போவ்ஸ் 51, கேப்டன் டாம் லாதம் 98 ரன் (85 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாக். பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 10 ஓவரில் 78 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா 1 விக்கெட் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இமாம் உல் ஹக் 24, கேப்டன் பாபர் 65, அப்துல்லா ஷபிக் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.தொடக்க வீரர் பகார் ஸமான் 180 ரன் (144 பந்து, 17 பவுண்டரி, 6 சிக்சர்), முகமது ரிஸ்வான் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் பகார் ஸமான் ஹாட்ரிக் சதம் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தான் 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி கராச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post பகார் ஸமான் 180 ரன் விளாசல் 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Baqar Zaman ,Pakistan ,Rawalpindi ,New Zealand ,Rawalpindi Cricket Stadium ,
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்