×

பஞ்சாப் தொழிற்சாலையில் எரிவாயு கசிவால் மூச்சுத்திணறி 10 பேர் பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் 11 பேர் அட்மிட்

லூதியானா: லூதியானா தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா அடுத்த கியாஸ்புரா பகுதியில் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து இன்று காலை திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் திணறி மயக்கமடைந்தனர். தொழிற்சாலை மட்டுமின்றி அந்த தொழிற்சாலையின் வெளியே உள்ள கடையில் நின்றவர்களும் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மூச்சுத் திணறிய நிலையில் உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் இதுவரை 10 பேர் பலியானதாகவும் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரிடர் மீட்புக் குழு அதிகாரி கூறுகையில், ‘தொழிற்சாலையில் எரிவாயு கசிந்த ஏற்பட்டதால் தொழிற்சாலையின் உள்ளே இருந்தவர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்தவர்களும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 10 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. தொழிற்சாலைக்கு வெளியே அமைந்துள்ள மருத்து கடையில் பணியாற்றிய மருத்துவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

The post பஞ்சாப் தொழிற்சாலையில் எரிவாயு கசிவால் மூச்சுத்திணறி 10 பேர் பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் 11 பேர் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Punjab factory ,Ludhiana ,Ludhiana factory ,
× RELATED பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!