×

மோசமான வானிலை காரணமாக ‘சார்தாம்’ யாத்திரை திடீர் நிறுத்தம்: உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை

கேதார்நாத்: மோசமான வானிலை காரணமாக சார்தாம் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு நிறுத்தியுள்ளதால், பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்கள் உள்ளன. இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் மேற்கொள்ளும் புனித பயணம், ‘சார்தாம்’ யாத்திரை என்றழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ஒட்டி உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை கடந்த 25ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் சார்தாம் யாத்திரையை மேற்கொண்டனர். ஆனால் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் மோசமான வானிலை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார்தாம் யாத்திரையை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி ரவி சைனி கூறுகையில், ‘மோசமான வானிலை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு சார்தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் பயணிகள் தங்குவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வானிலை சீரானவுடன் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடரலாம். சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post மோசமான வானிலை காரணமாக ‘சார்தாம்’ யாத்திரை திடீர் நிறுத்தம்: உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sardham pilgrimage ,Uttrakhand Govt ,Kedarnath ,Uttarkhand government ,Uttharkand ,Sardham ,Uttarakhand government ,Dinakaran ,
× RELATED குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை அடைப்பு