×

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி கோவை, மதுரை ரயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதல்

உடுமலை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் சுற்றுலா தலங்கள், கோயில்கள், உறவினர்கள் வீடுகளுக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர். தென் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களும், மதுரையில் சித்திரைத் திருவிழாவும் நடைபெறுகின்றது. இதனால் பலரும் பேருந்துகள் மற்றும் இரயில்களில் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தொழிலாளர் தின விடுமுறையும் (திங்கட்கிழமை) தொடர்ந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி வழியாக இரவு 7.30 மணிக்கு மதுரையை அடைகிறது.இந்த வழித்தடத்தில் போத்தனூர், கிணத்துக்கடவு, கோமங்கலம், மைவாடி, புஸ்பத்தூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பலரும் மதுரை செல்லும் ரயிலில் மிகுந்த ஆர்வத்துடன் பயணிக்கின்றனர். ஆன்மிக பயணத்திற்கும் பக்தர்கள் பலரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.பாலக்காடு – திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்ததோடு கடந்த வாரம் பிரதமர் மோடி மின்மயமாக்கப்பட்ட பாதையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். எனவே இவ்வழியில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி கோவை, மதுரை ரயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதல் appeared first on Dinakaran.

Tags : Govai ,Madurai ,Udumalai ,Tamil Nadu ,Goai, Madurai ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை