×

திருவாரூர் அருகே புலிவலத்தில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை

 

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலத்தில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சிக்கு சொந்தமான தச்சன் குட்டை குளமானது அங்குள்ள தாகீர் தெருவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி வசித்து வருபவர்கள் குளத்திற்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன் குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் குளத்து நீர் வடிவதற்கு வழி இல்லாமல் சாலையில் தேங்கும் நிலை இருந்து வருகிறது.

இதனையடுத்து இந்த குளத்தில் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளைஅகற்றிடுமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதனையடுத்து இந்த குளத்தை சுற்றி இருந்து வரும் முள்வேலிகள் மற்றும் மதில் சுவர்கள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஈடுபட்டனர். அதன்படி வருவாய் ஆய்வாளர் கலையரசன், கிராம நிர்வாக அலுவலர் மார்ட்டின் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணை தலைவர் கார்த்திக், ஊராட்சி செயலர் தங்கதுரை மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தாங்களாகவே தங்களது மதில் சுவர் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாகவும் இதற்கு கால அவகாசம் வழங்குமாறும் தெரிவித்ததன் பேரில் ஒரு வார காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டுமென அலுவலர்கள் கால அவகாசம் வழங்கிய நிலையில் தற்போது முதல் கட்டமாக குளத்தை சுற்றி இருந்து வரும் முள்வேலிகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

The post திருவாரூர் அருகே புலிவலத்தில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pulivalam ,Thiruvarur ,Revenue Department ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்