×

கீழ்வேளூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

 

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தை பள்ளி மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்க, கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 61 பள்ளிகளை சேர்ந்த 80 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் தமிழ்நெல்வன், சுரேஷ்குமார் சங்கரவடிவேலு, வீரப்பத்திரன், வைத்தியநாதன், தேவி, சுகுமாரி, உமா உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.

The post கீழ்வேளூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Kilivelur ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது