×

கீழ்வேளூர் அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

 

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தேவூர் பிடாரியம்மன் கோயிலில் இருந்து காப்பு கட்டிக்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்தரவராயனுடன் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து செல்லமுத்துமாரியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இரங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா எற்பாடுகளை கிராமவாசிகள், விழா குழுவிவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Chelamuthu Mariyamman temple ,Devur ,Kilvellur ,Kilivellur ,Nagapattinam district ,Devur Chelamuthu Mariyamman temple ,Devur Chelamuthu Mariyamman temple painting festival ,
× RELATED ஏமாந்தவர்கள் டார்ச்சரால் பணம் வசூலித்த வாலிபர் திடீர் தற்கொலை