×

ஆர்.எஸ் மங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது: எம்எல்ஏ பங்கேற்பு

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 30: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 70வது பிறந்த நாளை விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக சனவேலி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சனவேலி கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் நல்ல சேதுபதி தலைமையிலும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆர்.எஸ் மங்கலம் யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, வைஸ் சேர்மன் சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன். உள்ளிட்டோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டது. அதே போல் சுமார் 15 க்கும் மேற்பட்ட குழுவினர் மாடுபிடி வீரர்களாக இளைஞர்கள் களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனர். இதில் ஒவ்வொரு காளைகளுக்கும் 9 மாடுபிடி காளையர்கள் களத்தில் இறக்கப்பட்டு ஆடுகளம் சூடு பிடித்தது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் நினைவு பரிசுகள் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், எம்எல்ஏ, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் நல்ல சேதுபதி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார்.

அதேபோல் மாடுகளை பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பகவத் சிங், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடாஜலபதி, மேழிச் செல்வம், ஆனந்தும் ஊராட்சி மன்ற தலைவர் துர்ரத்து நிஷா முகமது அபுதாஹிர், உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். இந்த போட்டியை ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். இந்த மஞ்சுவிரட்டு விழாவில் திமுக நிர்வாகிகள் திருவாடானை ஒன்றிய செயலாளர் ரவி, ஆர்.எஸ்.மங்கலம் நகர் செயலாளர் கண்ணன், கொத்தியார் கோட்டை மணிமாறன், வழக்கறிஞர் சரவணன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சும்மர்என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. அன்னதானத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று மாட்டு வண்டி பந்தயமும், குதிரை வண்டி பந்தயமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையிலான திமுகவினர் செய்திருந்தனர்.

The post ஆர்.எஸ் மங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : R.R. Kadamadu ,S Mangalam ,MLA ,R.R. S.S. ,Mangalam ,Tamil Nadu ,CM ,G. Stalin ,Nadam ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...