×

மீண்டும் பாஜவுக்கு செல்ல மாட்டேன்: நடிகர் சுமன் பேட்டி

திருமலை: ‘தேர்தலின் போது அரசியல் பயணம் குறித்து முழு விளக்கம் அளிப்பேன். மீண்டும் பாஜவில் செல்லும் வாய்ப்பில்லை’ என திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகர் சுமன் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், நடிகர் சுமன் கூறியதாவது: கொரோனா காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த ராணுவத்தினர், போலீசார், விவசாயிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற பேரிடரில் இருந்து நாம் பிழைத்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

தேர்தலின் போது அரசியல் பயணம் குறித்து முழு விளக்கம் அளிப்பேன். பாஜவில் இருந்து வெளியே வந்து விட்டேன். மீண்டும் பாஜவில் செல்லும் வாய்ப்பில்லை. தெலங்கானா மாநில பிரிவினையின் போது மாநிலம் பிரிந்தால் தான் வளர்ச்சி இருக்கும் என பாரதிய ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்தேன். தெலங்கானா முழுமையாக வளர்ச்சி பெற 5 ஆண்டுகள் ஆகும். அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் அவர்கள் உள்ள இடத்திலேயே வேலை வாய்ப்பு ஏற்படும் விதமாக செய்ய வேண்டும். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர்(பிசி) கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன்மோகன் முடிவு எடுத்தது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மீண்டும் பாஜவுக்கு செல்ல மாட்டேன்: நடிகர் சுமன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Suman ,Thirumalai ,Tirupati ,
× RELATED பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு