×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீராங்கனையான 24 வயதான பெலாரசின் அரினா சபலென்கா, 6-4, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கொலம்பியாவின் 21 வயது வீராங்கனை கமிலா ஒசோரியோவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவா (24 வயது), லாட்வியாவின் ஜெரினா ஆஸ்டபென்கோவாவை 6-2, 6-0 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ருமேனியாவின் 32 வயது வீராங்கனை இரினா கேமிலியாபேகு 7-5, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வென்றார். இன்னொரு போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை ஜூல் நிமியரை வீழ்த்தி காலிறுத்தி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ் (27 வயது), 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக இத்தாலி வீரர் ஆண்ட்ரியா வவசோரியை (27 வயது) வீழ்த்தி 3வது சுற்றிற்கு முன்னேறினார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Madrid Open ,Dennis Sabalenca ,Madrid ,Spain ,Sabalenka ,Dinakaran ,
× RELATED கடல் கடந்து வெளிநாட்டில் வாழும்...