×

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க வேண்டும்: கோஹ்லிக்கு பிஷன் சிங்பேடி அறிவுறுத்தல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி கூறியிருப்பதாவது: ஆஸி. தொடரின் போது ரகானேவை நான் கூர்ந்து கவனித்தேன். எந்தவொரு கேப்டனுக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், பந்துவீச்சாளர்களை கையாளும் திறன் தான், அதில் தான் ரகானே சிறப்பாக செயல்பட்டுள்ளார். கேப்டனின் பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் பீல்டிங் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு 3 டெஸ்ட்கள் போதுமான நேரம். கடுமையாக முயற்சித்தும் என்னைப் போன்ற கடும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு வாய்ப்பை கூட ரகானே வழங்கவில்லை. ரகானேவிடம் 50% அதிர்ஷ்டமும், 50% திறனும் உள்ளது. எனவே கோஹ்லி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோஹ்லி முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்….

The post டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க வேண்டும்: கோஹ்லிக்கு பிஷன் சிங்பேடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rakhine ,Bishan Singhbedi ,Kohli ,Mumbai ,Bishan Singh Bedi ,Aussie ,Dinakaran ,
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...