×

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

 

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 28.04.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 84 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 34 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 5 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 138 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் கடந்த 22.04.2023 முதல் 28.04.2023 வரையிலான ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1.ராபின், வ/27, த/பெ.அருள், எண்.1832, டாக்டர் அம்பேத்கர் நகர், 7வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை என்பவர் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார் இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளது. 2.மணிவண்ணன் (எ) சிசி மணிவண்ணன், வ/24, த/பெ.குப்பன், எண்.126, ஏரிக்கரை தெரு, காந்திநகர், ஆதம்பாக்கம், சென்னை 3.கார்த்திக் (எ) இருளா கார்த்திக், வ/24, த/பெ.ரகு, எண்.92, சசி நகர், வேளச்சேரி, சென்னை என்பவர் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார், இவர் மீது 4 வழக்கள் உள்ளது. 4.உதயகுமார் (எ) ஊசி, வ/22, த/பெ.கபாலி, எண்.1477, மயிலை பாலாஜி நகர், பள்ளிக்கரணை, சென்னை ஆகிய 4 நபர்களும் சேர்ந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும், 5.பிரதீப்குமார், வ/29, த/பெ.தனசேகர், எண்.73, மேட்டு தெரு, அயனாவரம், சென்னை என்பவர் மீது கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் 6.முத்து (எ) முத்து கிருஷ்ணன், வ/28, த/பெ.முனுசாமி, எண்.16, என்.எஸ்.கே.தெரு, வானுவம்பேட்டை, சென்னை 7.மோனிஷ் (எ) மோனிஷ்குமார், வ/23, த/பெ.வடிவேல், எண்.18/22, காந்தி தெரு, உள்ளகரம், சென்னை 8.பிரான்சிஸ், வ/23, த/பெ.யேசுதாஸ், எண்.2/56, காமராஜர் 2வது தெரு, உள்ளகரம், சென்னை ஆகிய மூவரும் சேர்ந்து மடிப்பாக்கம் பகுதியில் சிவப்பிரகாசம் என்பவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும் 9.சுரேஷ்குமார் (எ) அந்தமான் சுரேஷ், வ/25, த/பெ.கிருஷ்ணகுமார், எண்.177, சைதாப்பேட்டை, சென்னை என்பவர் மீது 4 வழக்குகள் உள்ள நிலையில் சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 28.03.2023 அன்று ராகுல் என்பவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் 10.அர்ஜுன்தாஸ், வ/35, த/பெ.பாதால் தாஸ், எண்.402, எம்.டி.எச் ரோடு, அம்பத்தூர், சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும், 11.சுப்பிரமணி, வ/47, த/பெ.பக்கிரி, அன்னம்மாள் நகர், கோயம்பேடு, சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், குற்றவாளிகள் ராபின், மணிவண்ணன் (எ) சிசி மணிவண்ணன், கார்த்திக் (எ) இருளா கார்த்திக், உதயகுமார் (எ) ஊசி, பிரதீப்குமார் ஆகியோரை 25.04.2023 அன்றும், முத்து (எ) முத்து கிருஷ்ணன், மோனிஷ் (எ) மோனிஷ்குமார், பிரான்சிஸ், சுரேஷ்குமார் (எ) அந்தமான் சுரேஷ், அர்ஜுன் தாஸ், சுப்பிரமணி ஆகியோரை 27.04.2023 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 11 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...