×

தருமபுரி அருகே தொப்பூர் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!!

தருமபுரி: தருமபுரி அருகே தொப்பூர் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று தருமபுரி மாவட்ட தொப்பூர் கணவாய் பகுதி வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் அருகே வளைவான திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த 2 கார்கள், மரக்கட்டை ஏற்றி வந்த லாரி மீது மோதி அடுத்தடுத்த விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தால் நெல் பாரம் ஏற்றி சென்ற லாரியம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கம் சாவடியினுடைய உதவி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சரிப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. நெல் பாரம் ஏற்றி சென்று அந்த விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடினார். மரக்கட்டை பாரம் ஏற்றி வந்த லாரியில் இருந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் என இருவர் காயமடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

The post தருமபுரி அருகே தொப்பூர் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Toppur road ,Tarumapuri ,Dharumapuri ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...