×

மீனவ கிராமங்களில் பதற்றம்: போலீஸ் குவிப்பு அதிமுக பிரமுகர் கொலையில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடலூர: கடலூர் முதுநகர் சோனங்குப்பம் அதிமுக பிரமுகர் கொலையில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த 2018ல் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான பஞ்சநாதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்து விட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ் அளித்த தீர்ப்பில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணியன் என்கிற எதிர்வேல், தென்னரசு என்கிற குமரன், ஸ்டாலின், முத்துக்குமார் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மற்ற 10 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு காரணமாக 2 மீனவ கிராமங்களிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் முற்றுகை ; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி கோர்ட்டில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உயர் அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர்.

The post மீனவ கிராமங்களில் பதற்றம்: போலீஸ் குவிப்பு அதிமுக பிரமுகர் கொலையில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Cuddalore court ,Cuddalore ,Muthunagar ,Sonankuppam ,Dinakaran ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...