×

(வேலூர்) புதிதாக மரங்கள் நட பொதுமக்கள் கோரிக்கை காட்பாடி –குடியாத்தம் சாலையில்

கே.வி.குப்பம், ஏப்.29: வேலூர் மாவட்டம் காட்பாடி – குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை சுமார் 30 கி.லோ மீட்டர் தொலைவை கொண்டதாகும். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையின் இருபுறமும் புளிய மரம் உட்பட பல வகையான மரங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிக்கபட்டு வந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்பட்டது. அதற்கு பதிலாக புதியதாக மரங்கள் நடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. தற்போது கோடை வெயில் வாட்டி வைதைக்கும் இந்த நேரத்தில் மரங்கள் இல்லாததால் இந்த வழியாக செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோன்று இந்த சாலையின் இருபுறமும் ஆபத்தான நிலையில் பட்டுபோன மரங்கள் உள்ளது. அவை வெயிலுக்கு காய்ந்து தீ பற்றி அசம்பாவிதம் ஏதேனும் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்ற பட்டு‌போன மரங்களை அகற்றவும், சாலையின் இருபுறமும் புதியதாக மரங்கள் நடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post (வேலூர்) புதிதாக மரங்கள் நட பொதுமக்கள் கோரிக்கை காட்பாடி – குடியாத்தம் சாலையில் appeared first on Dinakaran.

Tags : Velur ,Katpadi- ,Kudiatham road ,KV Kuppam ,Vellore District Katpadi – ,Kudiatham National Highway ,Vellore ,Katpadi – ,Kudiattam road ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...