×

பஸ் நிலையம் அருகே ரகளை தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது

புதுச்சேரி, ஏப். 29: புதுவை பஸ் நிலையம் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பஸ் நிலையம் ஒட்டியுள்ள ஒரு பார் அருகே மதுஅருந்திய 4 பேர் கும்பலாக நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டிருந்தனர். இதுபற்றி உருளையன்பேட்டை போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து எஸ்ஐ சந்திரசேகரன் உத்தரவின்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அங்கு போதையில் ரகளை செய்த கும்பலை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கடலூர் வானமாதேவி அருள் (36), சென்னை கேகே நகர் சிவசங்கர் (37), தாம்பரம் நடுவீரப்பட்டு பிரசாந்த் (30), மேட்டுப்பாளையம், சாணரப்பேட்ைட முரளி (24) என்பது தெரியவந்தது. புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த 4பேரும் போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவரவே அவர்கள் மீது வழக்குபதிந்து கைது செய்த போலீசார், கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

The post பஸ் நிலையம் அருகே ரகளை தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Puduvai ,station ,
× RELATED புதுச்சேரியில் அதிகரித்து வரும்...