×

காங்கிரசில் இணைந்தார் நடிகர் சிவராஜ்குமார் மனைவி

பெங்களூரு: காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் முன்னிலையில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா காங்கிரசில் நேற்று இணைந்தார். ர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் நேற்று காங்கிரசில் சேர்ந்தார். கீதாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் கொடியை வழங்கினார். இந்நிகழ்வில் சொரபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மதுபங்காரப்பா, காங்கிரஸ் செயல் தலைவர் சலீம்அகமது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொரபா தொகுதியில் மதுபங்காரப்பாவின் சகோதரர் குமார் பங்காரப்பா பாஜவின் சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போதும் பாஜவின் வேட்பாளராக களத்தில் உள்ளார். இது போன்ற சூழ்நிலையில் மதுபங்காரப்பாவுக்கு ஆதரவாக அவரின் சகோதரி கீதா சிவராஜ்குமார் பிரசாரம் மேற்கொள்வார் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி எளிதாகியுள்ளது.

இது குறித்து கீதா சிவராஜ்குமார் கூறுகையில், ‘எங்களின் தந்தை பங்காரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சிதான் முதல்வர் பதவி வழங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரசில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். சிவராஜ்குமாரும் பிரசாரத்தில் ஈடுபடுவார்’ இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளான கீதா, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

The post காங்கிரசில் இணைந்தார் நடிகர் சிவராஜ்குமார் மனைவி appeared first on Dinakaran.

Tags : Congress ,Sivarajkumar ,Bengaluru ,Shivarajkumar ,Keita ,DK Sivakumar ,Sivaraj Kumar ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...