×

தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்க அரசு பணியாற்றுகிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: புதிதாக 91 எப்எம் டிரான்ஸ்மிட்டர்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்காக ஒன்றிய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது’ என குறிப்பிட்டார். கில இந்திய வானொலி ஒலிபரப்பை மேம்படுத்துவதற்காக, புதிதாக 91 எப்எம் டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், நாட்டின் 18 மாநிலங்களில் 85 மாவட்டங்கள் வானொலி சேவையை பெற்று சுமார் 2 கோடி மக்கள் பயனடைய முடியும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் போன்ற அரசின் திட்டங்கள், அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம், மக்கள் இயக்கமாக மாறியது. அந்த வகையில் நாட்டு மக்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு வானொலி மூலம் மட்டுமே சாத்தியமானது.

இதே போல, இந்த 91 எப்எம் டிரான்ஸ்மிட்டர்களும் வானொலி துறையில் புரட்சியை ஏற்படுத்தும். மேலும், தொலைதூர பகுதியில் இருப்பதாக கருதப்பட்டவர்களும் இனி பெரிய அளவில் இணையும் வாய்ப்பை பெறுவார்கள். எவ்வாறு தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்தியா தனது முழு திறனுடன் முன்னேற வேண்டுமானால், எந்த ஒரு இந்தியனும் வாய்ப்பின் பற்றாக்குறையை உணரக் கூடாது. எனவே நவீன தொழில்நுட்பங்கள் அணுகக் கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்க அரசு பணியாற்றுகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Union Government ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?