×

வீராங்கனைகளின் தொடர் போராட்டம் : பாஜ எம்.பி மீது வழக்கு டெல்லி போலீஸ் முடிவு

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாலியல் புகார் தொடர்பாக சனிக்கிழமை(இன்று) வழக்கு பதிவு செய்யப்படும் என்று டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

The post வீராங்கனைகளின் தொடர் போராட்டம் : பாஜ எம்.பி மீது வழக்கு டெல்லி போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Tags : Baja ,M. ,Delhi Police ,New Delhi ,President ,Indian Wrestling Federation ,GP ,Yuana Brijbushan Saran Singh ,BAJA M. ,
× RELATED கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி