×

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மே தினம் முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபானம் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், (மே 1ம்தேதி) உழைப்பாளர் தினத்தில், நாள் முழுவதுமாக மூட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) ஆகியவை நாள் முழுவதுமாக மூட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kanchipuram ,Collector ,Arti ,tasmak ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் முடிந்து மழைக்காலம்...