×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கசட்கினா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா தகுதி பெற்றார். 2வது சுற்றில் சக வீராங்கனை அனஸ்டசியா பாவ்லுசென்கோவா (31 வயது, 46வது ரேங்க்) உடன் நேற்று மோதிய கசட்கினா (25 வயது, 8வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடி பாவ்லுசென்கோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்துக்கு நீடித்தது. செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவா, சீனாவின் கின்வென் ஸெங் ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கசட்கினா appeared first on Dinakaran.

Tags : Kazatkina ,Madrid Open ,Madrid ,Women's Singles Division ,Spain ,Dinakaran ,
× RELATED கடல் கடந்து வெளிநாட்டில் வாழும்...