×

நுங்கு விற்பனை அமோகம்

கோபால்பட்டி: கோபால்பட்டி பகுதியில் நுங்கு விற்பனை களை கட்டுகிறது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை சீசன் துவங்கியதையடுத்து, பனைமரங்களில் நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது.

அவற்றை பறித்து விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபால்பட்டி பகுதியில் நுங்கு விற்பனை களை கட்டுகிறது. ஒரு நுங்க ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

The post நுங்கு விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Kopalpatti ,Gopalpatti ,Dindikal District ,Chanarbatti ,Amokam ,Dinakaran ,
× RELATED கோயில் கும்பாபிஷேக விழா