×

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஐஜி ஆசியம்மாள் விளக்கம்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணை பற்றி ஐஜி ஆசியம்மாள் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி உஷாவை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ரூ.6.35 கோடி, ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஐஜி ஆசியம்மாள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aruthra ,IG Asiamal Explanation ,Chennai ,Aruthra Gold ,IG Asiammal ,IG Asiamall ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி