×

பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் சூபர்வைசர்

கர்நாடகா, பெங்களூருவிலுள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் சூபர்வைசர் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Supervisor. மொத்த இடங்கள்- 10 (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 01.03.2023 தேதியின்படி 32க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி. மேலும் ஒரு வருட பணி அனுபவம்.

கட்டணம்: ரூ.200/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

http://edn.bhel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.05.2023.

The post பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் சூபர்வைசர் appeared first on Dinakaran.

Tags : Bharat ,Heavy Electronics ,Bharat Heavy Electronics ,Union Government PSU ,Bangalore, Karnataka, Bangalore ,Dinakaran ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு