சென்னை: சென்னையில் பல்வேறு பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை மேயர் மு.மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மேம்பால பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் அகற்றப்பட்டன. அதனை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு வார்டிலும் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மரங்களை நட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தயுள்ளதன் படி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-13, வார்டு-169ல் மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், வட்ட செயலாளர் எல்.ஆரோக்கியராஜ் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.
The post சென்னையில் பல்வேறு பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார் துணை மேயர் மு.மகேஷ்குமார் appeared first on Dinakaran.