×

பொன்னமராவதியில் நாக்-அவுட் கபடி போட்டி

 

பொன்னமராவதி,ஏப்.28: பொன்னமராவதியில் உள்ள பாண்டிமான் நகர இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த 35 அணியினர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பணமும் சுழற் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.பொன்னமராவதி பாண்டிமாநகரில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் புதுக்கோட்டை திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து 35 அணிகள் பங்கேற்ற கபடி போட்டியானது நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இரு தினங்களாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசான ரூபாய் 11,111 சின்னு முகாவாண்மை சார்பாக அரண்மனை சிறுவயல் அணியினர் பெற்றனர்.

இவர்களுக்கு ரொக்க பரிசுடன், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசான ரூ.9,999 பொன்னமராவதி ஆனந்தன், வேகுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து ஆகியோர் வெற்றி பெற்ற குன்றக்குடி அணிக்கு ரொக்க பணமும், வெற்றிக் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக ரூ 7,777 பட்டமரத்தான் விழா குழுவினர் சார்பாக வெற்றி பெற்ற ஏனாதி அணிக்கு ரொக்க பணமாகவும், வெற்றி கோப்பையையும் வழங்கினர். நான்காவது பரிசான ரூ.5,555 வெற்றி பெற்ற பொன்னமராவதி அணிக்கு ரொக்க பணத்தையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சித் தலைவர் அர்ச்சுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பொன்னமராவதியில் நாக்-அவுட் கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Knock- ,Kabaddi ,Ponnamaravati ,Pandiman ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்