×

ஏப்.30ல் சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு வாடிவாசலில் வர்ணம் பூசிய அணை மரம் நடுதல் நிகழ்வு: அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

 

மதுரை: சத்திரப்பட்டியில் ஏப்.30ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் வாடிவாசல் முகப்பில் வர்ணம் பூசிய அணை மரம் நட்டு வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிழக்குத்தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டியில் வரும் ஏப்.30ம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர் மாடம் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறம் மைதானத்தின் வாடிவாசல் முகப்பில் நடுவதற்காக வர்ணம் பூசிய அணை மரம் தயார் செய்யப்பட்டது.

இந்த அணை மரத்தை நட்டுவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு அணை மரத்தை நட்டு வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் சுமார் ஆயிரம் காளைகள் பங்கேற்க உள்ளன. தகுதியான மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் கார், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. அணைமரம் நடுதல் நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மேலூர் மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன், ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன், ஒன்றிய கவுன்சிலர் பிரேம்ஆனந்த், கிரி, கவுரிசங்கர், வக்கீல் கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ஏப்.30ல் சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு வாடிவாசலில் வர்ணம் பூசிய அணை மரம் நடுதல் நிகழ்வு: அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chatrapatti Jallikattu ,Minister ,P. Murthy ,Madurai ,Jallikattu ,Chatrapatti ,Wadivasal ,Jallikattu Wadivasal ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...