×

(தி.மலை) டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 1ம் தேதி விடுமுறை தொழிலாளர் தினத்ைத முன்னிட்டு

திருவண்ணாமலை, ஏப்.28: தொழிலாளர் தினத்ைத முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வரும் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: தொழிலாளர் தினத்தை முன்னி்ட்டு வரும் 1ம் தேதியன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்கள்), உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் அன்று மூடபட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post (தி.மலை) டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 1ம் தேதி விடுமுறை தொழிலாளர் தினத்ைத முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Tasmac ,Labor Day ,Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி