×

(தி.மலை) மே தினத்தன்று கிராம சபை கூட்டம் 860 ஊராட்சிகளிலும் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.28: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் வரும் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக விவாதிக்கலாம்.
கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் மற்றும் திட்டபணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகம், கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post (தி.மலை) மே தினத்தன்று கிராம சபை கூட்டம் 860 ஊராட்சிகளிலும் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Gram Sabha ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி