×

ஆள் கடத்தல் வழக்கில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது

* தானே கோர்ட் ஜாமீனில் விடுவிப்பு * பதவி நீக்கம் செய்ய பாஜ நெருக்கடிமும்பை: ஆள் கடத்தல் வழக்கில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது செய்யப்பட்டார்.  தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ளவர் ஜிதேந்திர ஆவாத். இவர் மீது, தானேயை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஆனந்த் கர்முசே பரபரப்பு புகார் கொடுத்திருந்தார். அதில், ‘கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி, இரவு போலீசார் சிலர் எனது வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள், ஆவாத்தின் படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், அமைச்சர் ஜிதேந்திர ஆவாத்தின் பங்களாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் என்னை கடுமையாக தாக்கினர். அவ்வாறு போலீசார் தாக்கும்போது, அமைச்சர் அங்கு இருந்தார். அவர் முன்னிலையில்தான் இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறின’ என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்த போலீஸ் படையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கு குறித்து வர்தக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் படையை தனது அதிகாரத்தைபயன்படுத்தி துஷ்பிரயோகமாக அமைச்சர் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார். இது பெரும்பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 365, 324, 143, 147, 148, 506  ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். வாக்கு மூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை உடனடியாக நேற்றிரவே தானே மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் சார்பில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை 10,000 மற்றும் ஒருவர் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் நேற்று மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து அமைச்சர் ஜிதேந்திர ஆவாத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜ போர்க்கொடி  தூக்கியுள்ளது. பாஜ தலைவர்கள் பலரும் இது தொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கு நெருக்கடி கொடக்க தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த பாஜ தலைவர் கிரித் சோமையா, ‘‘ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் ஜிதேந்திர ஆவாத்தை அமைச்சர் பதவியில் இருந்து கண்டிப்பாக நீக்கம் செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஒன்றிய பாஜ அரசு ஒன்றிய புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. சமீபத்தில் இதுகுறித்து குறிப்பிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சிலரை குறி வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். ஏஜென்சிகளின் நடவடிக்கைகளை மாநில பாரதிய ஜனதாவினர் ஆதரிக்கிறார்கள் என கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில், அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு மிரட்டல் வந்துள்ள நிலையில், ஜிதேந்திர ஆவாத் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜவுடனான எதிர்ப்புக்கு பிறகு சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு நெருக்கடி தொடர்ந்து நிலவுகிறது….

The post ஆள் கடத்தல் வழக்கில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,state minister ,Jitendra Awad ,Thane Court ,BJP ,Mumbai ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன...