×

அமெரிக்காவில் பயங்கரம்; உணவு டெலிவரி பாய் சரமாரியாக வெட்டி கொலை

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் ரண்டால் கூக். இவர், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி கடைசி டெலிவரியை முடித்தார். பின்னர் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், கடைசி டெலிவரியை முடித்து விட்டேன், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவேன்’ என்று கூறியிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் கூக் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி பதற்றமடைந்தார். உடனே உபெர் ஈட்ஸ் நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

இதையடுத்து கடைசியாக கூக் டெலிவரி செய்துவிட்டு லாக் ஆப் செய்த இடத்தை அந்நிறுவனம் வழங்கியது. மேலும் கடைசியாக டெலிவரி செய்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆஸ்கர் சோலிஸ் என்பவர், கூக்கை கொலை செய்து, அவரது உடல் உறுப்புகளை தனித்தயாக வெட்டி பையில் அடைத்து குப்பையில் வீசியது தெரியவந்தது. இந்த தகவலை கேள்விபட்டதும் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post அமெரிக்காவில் பயங்கரம்; உணவு டெலிவரி பாய் சரமாரியாக வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : United States ,Chamari ,Florida ,Randall Cooke ,Florida, USA ,Uber Eats ,
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!