×

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி விற்பனை வருவாய் ஈட்டி சாதனை படைத்தது மாருதி சுசூகி..!!

பெய்ஜிங்: ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் விற்பனை வருவாய் ஈட்டி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களின் விற்பனை மூலமாக ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ள முதல் நிறுவனம் மாருதி சுசூகி ஆகும். 2022-23-ல் கார் விற்பனை வாயிலாக ரூ.1,12,500.80 கோடியையும், இதர வருவாயாக ரூ.5,022 கோடியும் ஈட்டியுள்ளது. 2021-22-ல் ரூ.83,798 கோடியாக இருந்த மாருதி சுசூகி கார் விற்பனை வருமானம் 2022-23-ல் ரூ.28,702 கோடி அதிகரித்துள்ளது. இதர வருவாய் உள்பட 2021-22-ல் ரூ.90089 கோடியாக இருந்த மாருதி சுசூகி மொத்த வருமானம் 2022-23-ல் ரூ.27433 கோடி ஆகும்.

இதுவரையில் எந்தொரு இந்திய நிறுவனமும் தனது சொந்த தயாரிப்பை மட்டுமே வைத்து இந்த உச்சத்தை எட்டியது இல்லை. இது மட்டும் அல்லாமல் இந்த 1 லட்சம் கோடி ரூபாய் சாதனை மூலம் உலகளாவிய டாப் 30 நிறுவனகங்கள் பட்டியலில் மாருதி சுசூகி இணைந்துள்ளது. மாருதி சுசூகி 14.5 பில்லியன் டாலர் வருவாய் உடன் 28வது இடத்தில் உள்ளது. உலகின் டாப் 30 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் 17வது இடத்தில் உள்ளது.

The post ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி விற்பனை வருவாய் ஈட்டி சாதனை படைத்தது மாருதி சுசூகி..!! appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Beijing ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...