×

பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: மாணவர்களை கொல்லப்போவதாக மிரட்டியதால் அதிர்ச்சி..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்களை கொள்ளப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மால்டா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் 8 ஆம் வகுப்பறைக்குள் புகுந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியரையும் மிரட்டியுள்ளார்.

இதனால் செய்வதறியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதை பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கு விரைந்து வந்த காவலர்கள் துப்பாக்கியுடன் வந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கண்ட துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: மாணவர்களை கொல்லப்போவதாக மிரட்டியதால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...