×

சென்னையில் ஏப். 30ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்..!!

சென்னை: சென்னையில் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 30ல் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று காலை சரியாக 9:30 மணியளவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த போட்டியினை நேரில் காண்பதற்காக இரவு முழுவதும் மைதானத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ரூ.1,500, ரூ.2000, ரூ.2500 ஆகிய டிக்கெட்டுகள் கவுண்டர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.3,000, ரூ.5000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைனில் விலை கூடுதல் என்பதால் கவுண்டர்களின் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்களுடன் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்குவதில் சிரமம் இருப்பதால், பெண்களுக்கு தனிவரிசையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சாலையின் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இளம் வயதினர், முதியோர்கள் என ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையில் காத்துள்ளனர். தோனி ஆட்டத்தை காண காத்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

The post சென்னையில் ஏப். 30ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Ap ,Chennai ,IPL cricket match ,Chennai Chepaukam Ground ,Dinakaran ,
× RELATED பாலாற்றின் குறுக்கே தடுப்பணை...