×

ராசிபுரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கருப்பணார் கோயில் திருவிழா: 10,000 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

நாமக்கல்: 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ராசிபுரம் பல்லத்து கருப்பணார் கோயில் திருவிழாவில் 10,000 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ள பட்டணம் பல்லத்து கருப்பணார் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருப்பணார் சாமிக்கு முதலாவதாக பல தானிய பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும், பலா பூஜையும் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பலி கொடுத்து நீர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவையொட்டி இரவு வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

The post ராசிபுரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கருப்பணார் கோயில் திருவிழா: 10,000 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!! appeared first on Dinakaran.

Tags : Karuppanar temple festival ,Rasipuram ,Namakkal ,Rasipuram Pallatu Karupanaar temple festival ,
× RELATED தேனீக்கள் கொட்டி 10 பேர் படுகாயம்