×

பூ வியாபாரி போராட்டம்

 

தேனி, ஏப். 27: தேனி அருகே வீரபாண்டியில், கவுமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்தி வந்தவர் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த கணேசன். இவர் இறப்பிற்கு பின் இக்கடையை இவரது மகன் செல்வக்குமார் நடத்த முன்வந்தபோது, கடையை வேறு ஒருவருக்கு அறநிலையத் துறை நிர்வாகம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இக்கடையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதில் தீர்வு ஏற்படாத நிலையில், நேற்று மாலை 3 மணியளவில், தேனி கலெக்டர் அலுவலகம் வந்த செல்வக்குமார், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார் நிற்கும் போர்டிகோவில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

The post பூ வியாபாரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Veerapandi ,Gaumariamman ,
× RELATED நீர்வரத்து குறைந்தபோதும் வீரபாண்டி முல்லையாற்றில் குவியும் பயணிகள்