×

தேசிய ஹாக்கி போட்டி மதுரை மாணவி தேர்வு

 

மதுரை, ஏப். 27: தேசிய அளவிலான சப்ஜூனியர் ஹாக்கிப்போட்டிக்கு மதுரை மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த ஹாக்கி பயிற்சியாளர் மரியஜான்பால். இவரது மகள் ஜோவின்னோடிபினி. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 7ம் வகுப்பு மாணிவியான இவர் ஹாக்கி வீராங்கனை. இந்நிலையில் மாணவி ஜோவின்னோடிபினி, இந்திய ஹாக்கி சப்ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓடிசா மாநிலத்தில் மே4ல் நடைபெற இருக்கும் தேசிய சப்ஜூனியர் ஹாக்கிப்போட்டியில் இவர் விளையாட இருக்கிறார். இவரை பள்ளி தலைமை, ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர்.

The post தேசிய ஹாக்கி போட்டி மதுரை மாணவி தேர்வு appeared first on Dinakaran.

Tags : National Hockey Tournament Madurai ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை