×

(தி.மலை) 21வது தேசிய அளவிலான தடகளப்போட்டி நாளை தொடக்கம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு திருவண்ணாமலையில்

 

திருவண்ணாமலை, ஏப்.27: திருவண்ணாமலையில் தேசிய அளவிலான தடகளப்போட்டி, நாளை தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. அதில், பல்ேவறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து, தமிழ்நாடு மாநில தடகளச்சங்கத்தின் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட தடகளச்சங்கம் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி இணைந்து, நடத்தும் 21வது தேசிய அளவிளான தடகளப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை தொடங்குகிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

தடகளப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும், 200க்கும் மேற்பட்ட நடுவர்கள் முன்னின்று போட்டிகளை நடத்த உள்ளனர். தேசிய அளவிலான தடகளப் போட்டியின் தொடக்க விழா, நாளை மாலை 5.30 மணியளவில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெறுகிறது. அதில், திரைப்பட நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.மேலும், விழாவில் மாநில தடகள சங்கத் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், தடகளச்சங்கத்தின் செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post (தி.மலை) 21வது தேசிய அளவிலான தடகளப்போட்டி நாளை தொடக்கம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : T.Malaya ,21st National level athletics competition ,Tiruvannamalai ,T.Malai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...