×

விஏஓ கொலையில் மேலும் ஒருவர் கைது

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ், நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது 2 பேர் உள்ளே நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு அரசு சார்பாக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல்பற்றி போலீசில் புகார் செய்ததால் விஏஓவை கொலை செய்ததாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான மாரிமுத்து என்பவரை தனிப்படையினர், தாழையூத்தில் நேற்று கைது செய்தனர். இதனிடையே நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து லூர்து பிரான்சிசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், களப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு சிறப்புச் சட்டம் நிறைவேற்றும் வரை சட்டம் ஒழுங்கு, மணல் கொள்ளை உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும், காவல்துறைக்கு புகார் அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தனர்.

The post விஏஓ கொலையில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Karinganallur ,Lourdes Francis ,Tuticorin district ,Vallanadu ,Murappanadu Kovilpatu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!