×

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்..!

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புபடையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே நக்சல் தடுப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என பூபேஷ் பாதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புபடையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி; சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடாவில் காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். கடினமான சூழலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும் இன்று குறிப்பிட்டுள்ளார்.

The post சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்..! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chattisgar ,Delhi ,Chattisgarh ,Chattiscar ,Dhandewada ,Chhattisagar ,Dinakaran ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...