×

பஞ்சாப் மாஜி முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பிரகாஷ் சிங் பாதல் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரது பங்களிப்புகளை அம்மாநில மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவருமே எந்நாளும் நினைவுகூர்வர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பஞ்சாப் மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பஞ்சாப் மாஜி முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Former ,Punjab ,Chief Minister ,Prakash Singh Badal ,M.K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,M.K. Stalin ,
× RELATED பூத்தில் உட்காரக்கூட பாஜவுக்கு ஆள்...