×

செய்யாறு அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களுக்கு ராகிங்: 8 மாணவர்கள் மீது நடவடிக்கை

செய்யாறு: செய்யாறு அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்ட 8 மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 8,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. இவற்றில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி எதிரே ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 19 பேர், 2ம் ஆண்டில் ஒரு மாணவன், 3ம் ஆண்டில் 8 மாணவர்களும் என 28 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் தாங்கள் தெரிவிக்கும் வேலைகளை செய்யாவிட்டால் ஜூனியர் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் டார்ச்சர் செய்யும் கொடுமை பல ஆண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று முன்தினம் மாலை, சீனியர் மாணவர்களான 8 பேர், தாங்கள் சொன்ன வேலைகளை ஜூனியர் மாணவர்கள் சரியாக செய்யாததால் விடுதியில் உள்ள பெட்ஷீட்களை சாட்டையை போல் முறுக்கி 19 மாணவர்களையும் ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடி வாங்கிய மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சக நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ நேற்று வைரலானது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று விடுதி வார்டன் ரவி, கல்லூரி முதல்வர் கலைவாணி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விடுதி வார்டன் ரவியிடம் கேட்டபோது, ‘சீனியர் மாணவர்கள் மிரட்டுவதாக ஜூனியர் மாணவர்கள் என்னிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். பலமுறை அறிவுரை கூறியும் அவர்கள் என்னையே மிரட்டுகின்றனர். என்னை மதிப்பதில்லை. இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியிடம் முறையிட்டுள்ளேன்’ என்றார்.

இச்சம்பம் குறித்து கல்லூரி முதல்வர் கலைவாணி கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சீனியர் மாணவர்கள் 8 பேர் ஜூனியர் மாணவர்கள் 19 பேரை சாட்டையால் அடித்து தாக்கிய சம்பவம் தெரிய வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் விடுதி வார்டன் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் 8 மாணவர்களையும் கல்லூரிக்கு வர வைத்து மாணவர்களின் பெற்றோரிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். 25ம் தேதி முதல் (நேற்று) கல்லூரி விடுதிக்குள் வரக்கூடாது எனவும், ஜூனியர் மாணவர்களை அடித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இன்று 8 மாணவர்களும் அவரவர் பெற்றோருடன் வரவேண்டும் என்று கூறி விடுதிக்குள் அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

8 மாணவர்களையும் கல்லூரிக்கு வர வைத்து மாணவர்களின் பெற்றோரிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். 25ம் தேதி முதல் (நேற்று) கல்லூரி விடுதிக்குள் வரக்கூடாது எனவும், ஜூனியர் மாணவர்களை அடித்தது தொடர்பாக விசாரணையும் நடத்தப்படும்.

The post செய்யாறு அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களுக்கு ராகிங்: 8 மாணவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Government College Hotel ,Thiruvandamalai District ,Government College Inn ,
× RELATED சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது...