×

என்ன பேரருள்! என்ன பேரருள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சோழசிங்க புரம் எனும் சோளிங்கரில் இருந்த பக்தர் ஒருவர், வருடந்தவறாமல் காஞ்சிக்குச் சென்று கருடசேவையை தரிசித்து, ஆனந்தமாகத் திரும்புவார். முதுமை வந்தது, உடல் தளர்வும் வந்தது. பக்தரால், காஞ்சிக்குச் சென்று கருடசேவையைத் தரிசிக்க முடியவில்லை. சோளிங்கரில் தக்கான் குளக்கரையில், சூரிய உதய காலத்தில் காஞ்சியை நோக்கி அமர்ந்தார் பக்தர்.

‘‘பகவானைத் தரிசிக்க முடியவில்லையே! இப்போது பகவான் கருடன் மேல் அமர்ந்து, கோபுரவாசலில் இரட்டைக் குடையின் கீழ் ஆனந்தமாக வெளிப்படுவாரே! அடியேனுக்கு அந்தப் பகவானைத் தரிசிக்கக் கொடுப்பினை இல்லையே!” என்று வருந்தினார் பக்தர்.

அவ்வளவுதான்! காஞ்சியில் கோபுரவாசலில் வெளிவந்த பகவான், சில நிமிடங்கள் மறைந்தார். அதே சமயம், தக்கான் குளக்கரையில் இருந்த பக்தருக்கு அங்கே கருட வாகனத்தில் காட்சி கொடுத்தார் பகவான். பகவானின் பேரருளை நினைத்து நெகிழ்ந்த பக்தர், ‘‘என்ன பேரருள்! என்ன பேரருள்! பேரருளாளா!” என்று நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்வை நினைவுறுத்தும் வகையில், இப்போதும் காஞ்சியில் நடக்கும் கருடசேவையில், பகவான் கோபுரவாசலில் எழுந்தருளும் போது, சில நிமிடங்கள் பகவானைக் குடையால் மறைப்பார்கள். பகவான் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் தரிசனம் தருவதாக ஐதீகம். பகவானே தேடிவந்து தரிசனம் தந்த அந்தப் பக்தர் யார் தெரியுமா? தொட்டையாசார்யர் எனும் மிக பெரிய ஆசார்ய புருஷர்-குருநாதர்.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post என்ன பேரருள்! என்ன பேரருள்! appeared first on Dinakaran.

Tags : Cholasinga Puram ,Kunkumum Anmigam ,Kanchi ,Garudaseva ,
× RELATED காஞ்சியில் லேசான மழை