×

சூடானில் ஆபத்தான நுண் கிருமிகளை பாதுகாக்கும் ஆய்வு கூடத்தை கைப்பற்றிய போராட்டக் குழு : மிக மிக மோசமான உயிரியல் ஆபத்து என WHO எச்சரிக்கை!!

கார்டூம் : சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு தரப்பினர் அந்நாட்டில் உள்ள உயிரியல் ஆய்வு கூடத்தை கைப்பற்றி இருப்பது மோசமான உயிரியல் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல், உள்நாட்டு போராக நீடித்து வருகிறது. இதில் 450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், போரில் ஈடுபட்டு வரும் ஒரு தரப்பினர் கார்டூம் நகரில் உள்ள தேசிய பொது சுகாதார ஆய்வு கூடத்தை கைப்பற்றியுள்ளதாகவும் அதில் தட்டம்மை, போலியோ, காலரா உள்ளிட்ட மிகவும் ஆபத்தான நுண் கிருமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆய்வு கூடத்தை கைப்பற்றிய குழுவினர் அங்கிருந்து ஊழியர்களை வெளியில் அனுப்பிவிட்டதாகவும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், இது மிக மிக மோசமான உயிரியல் ஆபத்து என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூடானில் ஆபத்தான நுண் கிருமிகளை பாதுகாக்கும் ஆய்வு கூடத்தை கைப்பற்றிய போராட்டக் குழு : மிக மிக மோசமான உயிரியல் ஆபத்து என WHO எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Sudan ,WHO ,Khartoum ,civil ,
× RELATED முஸ்லிம்களை சமமாக நடத்த இந்தியாவை வலியுறுத்துகிறோம்: அமெரிக்கா விளக்கம்