×

காங்கிரசுடன் கூட்டணியா? தனித்துப் போட்டியா?..நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் கமல்ஹாசன் ஆலோசனை..!

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்’ வருகிற 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு குறிப்பிட்டுளார்.

The post காங்கிரசுடன் கூட்டணியா? தனித்துப் போட்டியா?..நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் கமல்ஹாசன் ஆலோசனை..! appeared first on Dinakaran.

Tags : Congress ,Kamal Haasan ,Chennai ,People's Justice Center ,2024 parliamentary elections ,Dinakaran ,
× RELATED ஒன்னு கட்சிய கலைச்சுடு… இல்லன்னா...