×

கள்ளிக்குடி ஊராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

முத்துப்பேட்டை, ஏப். 26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்த திருவாரூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகளான பாண்டி கோட்டகம் குமாரபுரம் பள்ளிகள் உட்பட ஏழு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வாகன பேரணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சேர்க்கை பேரணியை வட்டாரக்கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ராமசாமி பேரணியினை முன்னின்று நடத்தினார்.

இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் பயிற்றுநர்கள் தரன், சுரேஷ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் அரசு பள்ளி நம்ம பள்ளி அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் வறுமையின் அடையாளம் அல்ல என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன அரசு பள்ளி மிகச் சிறந்த பொக்கிஷம் அதனை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களினுடைய கடமை இன்றைய தினம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5சதவீத இட ஒதுக்கீடு உட்பட ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன.

கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரசு செலவில் வெளிநாடுகளை சுற்றி பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயன்பெறுவீர் என்ற முழக்கங்கள் ஏந்தி அட்டைகள் கையில் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் இன்றும் நாளையும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மேற்கண்ட பள்ளிகளில் நடைபெறும் பேரணியில் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

The post கள்ளிக்குடி ஊராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Kallikudi Panchayat School ,Muthupet ,Thiruvarur ,Muthuppet ,Kallikkudi Panchayat School ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...