×

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு உரிமங்களை புதுப்பித்து தர வேண்டும்: முன்னாள் படைவீரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை

 

பெரம்பலூர்,ஏப்.26:துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் உரிமங்களை புதுப் பித்து தரவேண்டும். பெரம் பலூரில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர் களுக்கு நடைபெற்ற சிறப் பு குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் முன்னாள் படைவீர ர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங் கில் நேற்று(25ம்தேதி) மா லை முன்னாள் படை வீரர் கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலகண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி முன்னிலை வகித்தார். முன்னாள் படைவீரர் நல அமை ப்பாளர் சடையன் வரவேற் றார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் என மொ த்தம் 53 பேர் கலந்து கொ ண்டனர். அவர்களிடம் இரு ந்து 7 மனுக்கள் பெறப்பட் டது. நிகழ்ச்சியில் முன் னாள் படை வீரர்கள் மற் றும் அவர்களைச் சார்ந்தோர் சார்பாக நான்கு பேர் களுக்கு ரூ1.25 லட்சம் மதிப்பில் கல்வி நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் சார்பாக,இலவச மின் இணைப்பு வேண்டும். பட்டா மாறுதல் வழங்கிட வேண்டும். கருணை அடிப் படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி மகனுக்கு உபகரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே நெற்களமாக இருந்து விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்ட பகுதியை மீண்டும் மாற்றி விவசாய களமாக மாற்றியமைத்துத் தர வேண்டும். துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் உரிமங்களைப் புதுப்பித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது.

The post துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு உரிமங்களை புதுப்பித்து தர வேண்டும்: முன்னாள் படைவீரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Peram Balur… ,Dinakaran ,
× RELATED மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை