×

மதுரை அருகே சத்திரப்பட்டியில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏப்.30ல் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

 

மதுரை, ஏப். 26: மதுரை அருகே சத்திரப்பட்டியில் வரும் ஏப்.30ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிழக்குத்தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டியில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைப்பு, பார்வையாளர் மாடம் உள்ளிட்ட ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, ‘‘பாரம்பரியமிக்க கிராமமான சத்திரப்பட்டியில் மிகப் பிரமாண்டமான அளவில் ஜல்லிக்கட்டு போட்டி ஏப்.30ல் நடைபெறுகிறது.

இங்கு அறிஞர் அண்ணா அறிவியல் பூங்கா மன்றத்தை நேரடியாக வந்து திறந்து வைத்துள்ளார். சத்திரப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி பிற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் காளைகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. தகுதியான மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்கு கார், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். பொதுமக்கள் இடையூறு இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை காண மேடை அமைக்கப்பட்டு வருகிறது’’என்றார். இந்த ஆய்வின் போது மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், இலக்கிய அணி நேருபாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர் மதிவாணன், ஒன்றிய கவுன்சிலர் பிரேம் ஆனந்த், கோபி, கிரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆசை கண்ணன், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post மதுரை அருகே சத்திரப்பட்டியில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏப்.30ல் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jallikattu competition ,Tamil Nadu ,Chief Minister ,Chhatrapatti ,Madurai ,Minister P. Murthy ,Jallikattu ,Chatrapatti ,Tamil ,Nadu ,Minister ,P. Murthy ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...